சில்லி இட்லி
Oct 20, 2017

சில்லி இட்லி

சில்லி சிக்கன்,சில்லி பராட்டோ செய்கிறோமே இட்லியில் செய்தால் என்ன என்று தோன்றிய ஐடியா இது.

மீதமான இட்லியில் செய்தது...

தே.பொருட்கள்:

இட்லி - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி,பூண்டு - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*இட்லியை கட்செய்து முற்சூடு செய்த அவனில் 270 டிகிரியில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பின் சோயா சாஸ்+கெட்சப்+குடமிளகாய்+இட்லி சேர்த்து கிளறி இறக்கவும். 

To Advertise here contact : macafamily@gmail.com
↑