தமிழ் அரங்கம்

          தமிழ் அரங்கம் : ஒரு அறிமுகம்

 

தமிழ் கூறும் நல்லுலகம் என்று தமிழகத்தைக் குறிப்பது மிகத்தொன்மையான மரபு. வடவேங்கடம் தொடங்கி

தென்குமரி வரை என்ற வரையறைக்குட்பட்டதான தமிழகத்தை இன்றைய கண்ணோட்டத்தில்எங்கெங்கே தமிழின் ஒலி கேட்கிறதோ அங்கங்கெல்லாம் நல்லுலகமான தமிழகம் இருப்பதாக இதற்கு பொருள் கொள்ளலாம். புலம்பெயர்ந்து வாழும் தமிழராகிய நாம் இருக்குமிடம் நல்லுலகமாகத் திகழவேண்டுமெனில்தமிழ் கூறப்படவேண்டும்அதாவது தமிழின் ஒலி நிச்சயம் கேட்கவேண்டும்.

 தமிழ் அரங்கம் குழுமத்தின் முக்கிய நோக்கம் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகத்தை நம்மிடையே காணவேண்டுமென்பதே! தொரொண்தோ தமிழ் ஆர்வலர்களின் முதல் சந்திப்பில்இந்தக் கருத்தை முன்வைத்தே, ‘என் நாட்டை விட்டு விட்டு’ என்ற ஒரு தலைப்பை கொடுத்து விருப்பமுள்ளவர்களின் கருத்துகளைக் கேட்டார்கள். நாட்டை’ விட்டுவிட்டு, ‘கானடா’ கதியென்று வந்தாலும்இரண்டுக்கும் அடிப்படை இசை’ தானே!  அதாவது, ’இசைபட’ வாழ்தலே முறைமை என்பதால்இசையை ஒரு கூறாகக்கொண்ட தமிழோசை இங்கும் கேட்கவேண்டுமன்றோ?

 மாகா குழுவின் இலக்கியப்பிரிவு தமிழ் அரங்கம் என்றவுடன்இலக்கியவாதிகள் மட்டுமே பங்கேற்கும் குழுமம் என்றெண்ணிக் கலங்கவேண்டாம். இளைய தலைமுறையினரும்புதிய தலைமுறையினரும் வீட்டிலும் வெளியிடங்களிலும் வேற்று மொழியே பேசுவதாலும்பயிலுவதாலும் தமிழ் கூறும் நல்லுலகம் நம்மை விட்டு அகன்றுவிடுமோ என்ற ஐயத்தையும் அச்சத்தையும் தவிர்க்கதமிழ் அரங்கம் குழுமம் உதவுகிறது. தமிழ்மொழியைக் கற்கவிழையும் ஆர்வலர்களுக்குப் பயிற்றுவிக்கப்  பள்ளிகளும்தமிழின்மேல் மாறாத காதல்கொண்ட அன்பர்கள் கலந்துரையாட பேச்சுவிவாத மேடைகளும் உள. விருந்தினராய் வருகின்ற தமிழறிர்களின் சொற்பொழிவுகளும் கேட்கலாம். மரபுக் கவிதைபுதுக்கவிதை எதுவானாலும் அவற்றைக் கற்கலாம். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பேசிப்பழகலாம். எழுத்தில் வடிக்கலாம். ஏன்நாடகமாயும் நடிக்கலாம். முத்தமிழோசை முழங்க நல்லுலகம் காணலாம் நானிலத்தே.

 சங்கப்பலகையென ஆண்டுதோறும் அறிஞர்களின் சொற்பொழிவுகளை நம்மிடை அளிக்கும் தமிழ் அரங்கத்தின்  மேடையை இதுகாறும்கவிவேழம் இலந்தை சு.இராமசாமிஇசைக்கவி இரமணன்ஏர்வாடியார்நாஞ்சில் நாடன்எல்லே சுவாமிநாதன்கவியோகி வேதம்திருமதி வைதேஹி ஹெர்பர்ட்திருமதி பார்வதி விச்வேச்வரன்  முதலானோர் அணிசெய்துள்ளனர். கவியரங்குகாணொளியரங்குபுத்தக விமரிசனம் என்னும் பல நிகழ்வுகளையும் நமக்கு அளித்துள்ளது. கவிஞர் கொத்தமங்கலம் சுப்புஎழுத்தாளர்கள் சுஜாதாலா.ச.ராநா.பார்த்தசாரதிரா.கி.ரங்கராஜன்தேவன் முதலானோர்களின் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல்கள்சங்க காலத்தமிழ்ப் படைப்புகளைப் பற்றிய செய்திகளையும் இம்மேடையில் பேசக்கேட்டிருக்கிறோம்.

 வந்த விருந்தினருக்கு ஈடாக உள்ளூர் வித்வான்களும் இங்கே உள்ளனர். தமிழ் அரங்கம் குழுமத்தின் நிறுவன காலம் தொட்டு  தொடர்ந்து ஆதரவும்நிகழ்ச்சித் தொடர்களில் தொய்வும் வாராமல் தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் பேராசிரியர்கள் திரு. பசுபதிதிரு. அனந்தநாராயணன்திரு சௌந்தர் ,முனைவர். இரகுராமன்மற்றும் வெங்கட் முதலானோர் உள்ளனர்.

 தமிழ் அரங்கம் குழுமத்தின் துணை உறுப்பாக யாஹு குழும மடற்குழுவில் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் பதிவாக்கப்பட்டுள்ளன. இம்மடற்குழுவின் கோப்புகளில் விவரங்கள் காணப்பெறலாம்.

 https://groups.yahoo.com/neo/groups/macalit/info

 

 

 

 

 

To Advertise here contact : macafamily@gmail.com
↑